நிதி அமைச்சகம்
நித்தி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 2020-21-ல் இந்தியா முன்னேற்றம்
Posted On:
31 JAN 2022 2:45PM by PIB Chennai
நித்தி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 2019-20-ல் 60 ஆகவும், 2018-19-ல் 57 ஆகவும் இருந்த இந்தியாவின் மதிப்பெண் 2020-21-ல் 66 ஆக மேம்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதில் இந்தியா முன்னேறியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2021-22 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இந்தச் சாதனையை குறிப்பிட்டு, நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் வெளிப்படுத்தி உள்ளதாகக் கூறுகிறது .
நித்தி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீடு 2020-21, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் குறித்து பின்வருமாறு கூறுகிறது.
* 2019-20-ல் 10 ஆக இருந்த முன்னணி மாநிலங்களின் எண்ணிக்கை (65-99 மதிப்பெண்கள்) 2020-21ல் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக அதிகரித்துள்ளது.
* கேரளா மற்றும் சண்டிகர் முதலிடத்தில் உள்ள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக உள்ளன
* வடகிழக்கு இந்தியாவில் 64 மாவட்டங்கள் முன்னணி செயல்பாட்டாளர்களாகவும், 39 மாவட்டங்கள் செயல்திறன் மிக்கவர்களாகவும் இருந்தன (வட-கிழக்கு பிராந்திய மாவட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீடு 2021-22).
அறிக்கையின் இதர முக்கிய அம்சங்கள் வருமாறு:
2010-20-ல் தன் வனப் பகுதியை அதிகரிப்பதில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்தது; 2011-2021-ல் காடுகளின் பரப்பளவில் மூன்று சதவீதத்திற்கும் அதிகமாகப் பெருகியுள்ளது.
2022-ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைப் படிப்படியாக இந்தியா வெளியேற்றுவதோடு, நெகிழி பேக்கேஜிங் கழிவுகளின் சுற்றுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
கங்கை மற்றும் துணை நதிகளில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் இணக்க நிலை மேம்பட்டுள்ளது.
காற்று மாசின் அளவை 2024-ம் ஆண்டிற்குள் குறைக்க 132 நகரங்களில் தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உமிழ்வு குறைப்பு இலக்குகளை 2030-க்குள் அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது; தேவையான வளங்களை கவனமாகப் பயன்படுத்தவும் முடிவு.
ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ மற்றும் லீடிட் ஆகியவற்றின் கீழ் உலகளாவிய பருவநிலை தலைமைத்துவத்தை இந்தியா வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1793802
(Release ID: 1793857)
Visitor Counter : 1292