மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த உரையாடலின் 5-வது பதிப்பில் பங்கேற்கப் பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி நீட்டிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 28 JAN 2022 12:53PM by PIB Chennai

தேர்வு குறித்த உரையாடலின் 5-வது பதிப்பில் பங்கேற்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 3, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் தாம் உரையாடும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார். வாழ்க்கையை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் வகையில், தேர்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை கலந்துரையாடல் மூலம் எதிர்கொண்டு வெல்வது இதன் நோக்கம் ஆகும்.

2021-ம் ஆண்டைப் போலவே இணைய வழியில் நடைபெறும்  வகையில் இந்த நிகழ்ச்சியின் வடிவம் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்  பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆன்லைன் போட்டி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

https://innovateindia.mygov.in/ppc-2022/ எனும் இணைய முகவரியில் 28 டிசம்பர் 2021 முதல் 3 பிப்ரவரி, 2022 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793196

****


(வெளியீட்டு அடையாள எண்: 1793279) வருகையாளர் எண்ணிக்கை : 262