இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கிறிஸ் வாக்கரை நியமிக்க அரசு ஒப்புதல்
Posted On:
24 JAN 2022 2:03PM by PIB Chennai
இரண்டு முறை உலக ஸ்குவாஷ் சாம்பியன் பதக்கம் வென்ற கிறிஸ் வாக்கரை இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளராக நியமனம் செய்ய மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்குவாஷ் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் இங்கிலாந்தின் சார்பாக போட்டிகளில் கலந்து கொண்ட வாக்கர், 16 வாரங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியளிப்பார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டனான வாக்கரின் நியமனம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேர்வுக் குழு மற்றும் ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு தொடக்க உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை மார்க் கெய்ர்ன்ஸுடன் இணைந்து அவர் வென்றார். அமெரிக்காவிற்குச் சென்ற அவர், அமெரிக்க அணியின் தேசியப் பயிற்சியாளராக உயர்ந்தார்.
"உலக இரட்டையர், காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த முக்கியமான ஆண்டில், இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன்," என்று அவர் கூறினார்.
"வரவிருக்கும் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு அவர்களை தயார் செய்வதில் உதவ விரும்புகிறேன். வரவிருக்கும் மாதங்களை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று வாக்கர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792128
-----
(Release ID: 1792181)