வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
'திறந்தவெளி தரவுகள் வாரத்தை’ பொலிவுறு நகரங்கள் இயக்கம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கின.
Posted On:
17 JAN 2022 12:56PM by PIB Chennai
திறந்தவெளி தரவுகள் வாரத்தைத் தொடங்குவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இன்று அறிவித்தது, திறந்த தரவுகளை ஏற்றுக்கொள்வதையும் இந்தியாவின் நகர்ப்புற சூழலியலில் புதுமைகளையும் இது ஊக்குவிக்கவும்.
2022 பிப்ரவரியில் சூரத்தில் நடைபெறவிருக்கும் 'விடுதலையின் அமிர்த பெருவிழா - பொலிவுறு நகரங்கள்: பொலிவுறு நகரமயமாக்கல்' மாநாட்டிற்கு முன்னோடியாக தொடங்கப்பட்டுள்ள திறந்தவெளி தரவுகள் வாரம் ஜனவரி மூன்றாவது வாரத்தில், அதாவது 17 ஜனவரி 2022 முதல் 21 ஜனவரி 2022 வரை நடத்தப்படும்.
அனைத்து 100 பொலிவுறு நகரங்களின் பங்கேற்பை இந்த நிகழ்வில் காணலாம். உயர்தர தரவுத்தொகுப்புகள் மற்றும் தரவு வலைப்பதிவுகளை பொலிவுறு நகரங்கள் திறந்தவெளி தரவுகள் தளத்தில் வெளியிடும். 3,800-க்கும் மேற்பட்ட தரவுத்தொகுப்புகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட தரவுக் தகவல்கள் தளத்தில் ஏற்கனவே கிடைக்கின்றன.
கூடுதல் செயல்திறன், வெளிப்படைத் தன்மை, புதுமைக்கான ஊக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற திறந்த தரவுகளின் நன்மைகளைக் காண்பிப்பதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டு பிரிவுகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது - முதலில், 17 ஜனவரி 2022 முதல் 20 ஜனவரி 2022 வரை தரவுகள், காட்சிப்படுத்தல்கள் மற்றும் வலைப்பதிவுகள் உள்ளிட்டவை தளத்தில் பதிவேற்றப்படும். இரண்டாவது பிரிவில், 21 ஜனவரி 2022 அன்று அனைத்து பொலிவுறு நகரங்களும் தரவுகள் தினத்தைக் கொண்டாடவுள்ளன. .
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக்
காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1790466
*****
(Release ID: 1790505)
Visitor Counter : 283