பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவிட்-19 நிலை குறித்து முதலமைச்சர்களுடான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய நிறைவுரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 13 JAN 2022 7:50PM by PIB Chennai

2022-ல் இது முதல் கூட்டம். உங்கள் அனைவருக்கும் பொங்கல், மகர சங்கராந்தி, லோக்ரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறாண்டுகளில் இல்லாத தொற்றுக்கு எதிரானபோராட்டத்தில் மூன்றாவது ஆண்டில் நுழைந்துள்ளோம். கடின உழைப்புதான் நமது ஒரே பாதை மற்றும் வெற்றிதான் நமது ஒரே வாய்ப்பு. நமது முயற்சிகளுடன், இந்தியாவின் 130 கோடி மக்களும், கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீள்வது நிச்சயம்.

 

ஒமிக்ரான் குறித்த முந்தைய குழப்பம், தற்போது தெளிவாகிவிட்டது.  ஒமிக்ரான் வகை தொற்று, முந்தைய வகைகளை விட பொதுமக்களை வேகமாக பாதித்து வருகிறது. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும், பீதியான சூழ்நிலை இல்லை என்றாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும்.  இந்த பண்டிகை காலத்தில், மக்கள் மற்றும் நிர்வாகத்தினரின் எச்சரிக்கை எங்கேயும் குறையவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் பின்பற்றிய முன்கூட்டிய, செயல்திறனுடன் கூடிய மற்றும் கூட்டு அணுகுமுறை வழிதான், இந்த முறையும் வெற்றிக்கான மந்திரம்.  எவ்வளவு அதிகம் நாம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துகிறோமா, அந்தளவுக்கு சிக்கல்கள் குறைவாக இருக்கும்.

 

பல வகை கொரோனா தொற்று ஏற்பட்டாலும், பெருந்தொற்றை சமாளிக்கும் ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகம் முழுவதும் தனது சிறப்பான தன்மையை நிருபித்து வருகின்றன.  இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இந்தியா இன்று  வயதுக்கு வந்த 92 சதவீதம் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது. நாட்டில் 70 சதவீதம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.   10 நாட்களுக்குள் வளர் இளம் பருவத்தினர் 30 மில்லியன் பேருக்கு இந்தியா தடுப்பூசி செலுத்தியுள்ளது..  முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்துகிறோமா, அந்த அளவுக்கு நமது சுகாதார அமைப்பின் திறன் அதிகரிக்கும்.  வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தை 100 சதவீதம் மேற்கொள்வதை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.  தடுப்பூசி அல்லது முக கவசம் அணிவது பற்றி தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதும் அவசியமாகும்.

 

யுக்தியைஉருவாக்கும்போது, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்துக்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பு ஏற்படுதை மனதில்வைப்பது மிக முக்கியம். பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தின் வேகம் பராமரிக்கப்பட வேண்டும்.  ஆகையால, உள்ளூர் அளவிலான கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது.  வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச சிகிச்சை அளிக்கும் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான விதிமுறைகள்  தொடர்ந்து மேம்படுத்தப்படுவதையும், அவை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.  சிகிச்சை அளிப்பதில் தொலை தூர மருந்து வசதிகளை பயன்படுத்துவது மிகப் பெரிய அளவில் உதவும்.

 

சுகாதார கட்டமைப்பை பொருத்தவரை, அவற்றை புதுப்பிக்க ரூ.23,000 கோடி நிதியுதவியை பயன்படுத்தியதற்கு மாநிலங்களை நான் பாராட்டுகிறேன்.  இந்த நிதியுதவியின் கீழ், நாடு முழுவதும் 800 குழந்தைகள் சிகிச்சை பிரிவுகள், 1.5 லட்சம் புதிய தீவிர சிகிச்சை பிரிவு  மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ஆம்புலன்ஸ்கள், 950க்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்குகள் மருத்துவ கட்டமைப்பில் சேர்க்கப்பட்டன.  மருத்துவ கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை மறந்துவிடக்கூடாது.  கொரோனாவை முறியடிக்க, ஒவ்வொரு மாறுபட்ட கொரோனா வகைக்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒமிக்ரானை சமாளிப்பதோடு, எதிர்காலத்தில் புதிய வகை தொற்று ஏற்பட்டாலும், அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

****


(Release ID: 1790294) Visitor Counter : 181