பிரதமர் அலுவலகம்

புதுச்சேரியில் நடைபெற்ற 25-வது தேசிய இளைஞர் விழா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 12 JAN 2022 2:47PM by PIB Chennai

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களே, முதலமைச்சர் என் ரங்கசாமி அவர்களே, திரு அனுராக் தாக்கூர் அவர்களே மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இளம் நண்பர்களே, அனைவருக்கும் தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள். 


சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா நடைபெறும் இந்த ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அனைத்து வகையிலும் கூடுதல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இதே ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரு துறவிகளும் புதுச்சேரியுடன் தனித்துவ உறவைக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் ஆன்மிகப் பயணத்தில் ஒருவர் மற்றொருவரின் கூட்டாளியாக இருந்திருக்கிறார்கள்.
 

உலகம் தற்போது இந்தியாவை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் பார்க்கிறது.  ஏனெனில், இந்தியாவின் மக்கள் தொகை இளைஞர்களை அதிகம் கொண்டதாக இருப்பதால், இந்தியாவின் மனதும் இளமையாக உள்ளது..  இந்தியாவின் திறமை மற்றும் அதன் கனவுகளில்  இளமைத் துடிப்பு காணப்படுகிறது.  இந்தியாவின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளும் இளமையாகவே உள்ளது.  இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவம் எப்போதும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதோடு அதன் பழமையிலும் புதுமை காணப்படுகிறது.

எப்போதெல்லாம் தேச உணர்வு பிளவுபடுகிறதோ, அப்போதெல்லாம் ஆதி சங்கராச்சாரியா என்ற ஒற்றுமை இழை மூலம் நாட்டை இணைக்க முன்வருவார்கள்.  கொடுமைக்காலங்களில் குரு கோபிந்த் சிங்கின் சாஹிப்ஜாடே போன்ற இளைஞர்களின் தியாகங்கள் தற்போதும் நமக்கு வழிகாட்டுகிறது.  இந்தியாவின் சுதந்திரத்திற்காக தியாகம் தேவைப்பட்ட போது, பகத்சிங், சந்திரசேகர ஆசாத் மற்றும் நேதாஜி சுபாஷ் போன்ற புரட்சிகரமான இளைஞர்கள் நாட்டிற்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்க முன்வந்தனர்.  நாட்டிற்கு ஆன்மீக புத்துணர்வு தேவைப்படும் நேரங்களில் அரவிந்தர் மற்றும் சுப்பிரமணிய பாரதி போன்ற மகான்கள் நினைவுக்கு வருகின்றனர்.
 

இந்திய இளைஞர்கள் ஜனநாயகப் பண்புகளுடன் மக்கள் தொகை ரீதியான பங்களிப்பு கொண்டவர்களாக இருப்பதோடு, அவர்களின் ஜனநாயக பங்களிப்பு ஈடு இணையற்றது.  இந்தியா தனது இளைஞர்களை  மக்கள் தொகை அடிப்படையில் பங்களிப்பு வழங்கக்கூடியவர்களாகவும், வளர்ச்சி இயந்திரமாகவும் கருதுகிறது.

தற்போது இந்திய இளைஞர்கள் துடிப்புமிக்க தொழில்நுட்ப ஆற்றல் பெற்றவர்வளாகவும், ஜனநாயக உணர்வுகள் கொண்டவர்களாக திகழ வேண்டும்.  இந்திய இளைஞர்கள் கடினமாக  உழைக்கும் திறனை பெற்றிருந்தால், எதிர்காலத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். எனவேதான், உலகம் தன்னை எதிர்காலத்தின் குரலாக பார்க்கிறது.. 
 

நாடு சுதந்திரம் அடைந்தபோது இளைஞர்களாக இருந்த தலைமுறையினர், நாட்டிற்காக எதையும் தியாகம் செய்ய தயங்கியதில்லை.  ஆனால் தற்கால இளைஞர்கள்  நாட்டிற்காக வாழ்வதுடன், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்.   புதிய சவால்கள், புதிய கோரிக்கைகள் மற்றும் புதிதாக ஒன்றை உருவாக்கக்கூடியவர்களாக இளைஞர்கள் தனக்குத்தானேயும், சமுதாயத்தாலும் சுற்றிச்சுழன்று பணியாற்றலாம்.  தற்கால இளைஞர்கள் ‘சாதிக்க முடியும்’ என்ற உணர்வுடன் இருக்கின்றனர். இது அனைத்து தலைமுறைக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
 

இந்திய இளைஞர்கள் தற்போது உலகின் வளமைக்கான குறியீட்டை எழுதி வருகின்றனர்.  இந்திய இளைஞர் சக்தி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியான சூழலில் மதிப்பிடக்கூடியதாக உள்ளது.  இந்தியா தற்போது 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் வலிமை சூழல் முறையை  கொண்டதாக உள்ளது.  இதில் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் பெருந்தொற்று சவாலுக்கு இடையே உருவானவை.   இந்த அரசாங்கம் புதல்வர்களும் புதல்விகளும் சமமானவர்கள் என்று நம்புகிறது.இதை மனதில் வைத்துக்கொண்டு, புதல்விகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களின்  திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. புதல்விகளும் தங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும், அதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், இந்த பயணத்தில் இது மிக முக்கியமான நடவடிக்கை.
 

தேசிய இளைஞர் விழாவானது இந்திய இளைஞர்களின் மனதை வடிவமைத்து தேசத்தை கட்டமைக்க, அவர்களை ஒன்றுபட்ட சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமூக ஒருங்கிணைப்பு, அறிவுசார் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புக்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுவந்து, அவற்றை 'ஒரே பாரதம், ஒன்றுபட்ட பாரதம்’ என்ற ஒன்றுபட்ட திட்டத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

இது பண்டிகைக்காலம். நாடு முழுவதும் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளன. இந்தப் பண்டிகைகளுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காரணத்தால், கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் அவற்றைக் கொண்டாட வேண்டும். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இதனைக் கொண்டாட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.

****
****



(Release ID: 1789914) Visitor Counter : 196