வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டம்: 30 நிகழ்ச்சிகளை நடத்துகிறது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம்

Posted On: 11 JAN 2022 4:13PM by PIB Chennai

பிரதமர் அழைப்பு விடுத்த விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாட, 30 தொடர் நிகழ்ச்சிகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது.

இது குறித்து காணொலி காட்சி வழியாக  பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

 விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாட, ஒட்டு மொத்த நாடும் ஒன்றாக இணைந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற போது 17 சதவீத இந்தியர்கள் மட்டுமே நகர்ப்புறங்களில் வசித்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. நகர்ப்புற மேம்பாட்டில், விரிவான பங்களிப்பை அளிப்பதில் மத்திய வீட்டு வசதி அமைச்சகம் முன்னணியில் உள்ளது.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இதில் மக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்கள், தொழில்துறையினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் பங்களிப்பு அமோகமாக உள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை 30 நிகழ்ச்சிகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இறுதி நிகழ்ச்சியான, ‘ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் நகரமயமாக்கல் என்னும் மாநாடு சூரத்தில் பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. இங்கு 6  முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

இந்த கொண்டாடங்கள் சுதந்திர போராட்டம், செயல்பாடுகள்@75, சாதனைகள் @75, கருத்துக்கள் @75, தீர்மானம்@75 என்ற 5 கருப்பொருட்களை பிரதிபலிக்கின்றன. இந்த கொண்டாட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக பல நிகழ்ச்சிகள் நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் நடத்தப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் எளிதாக வாழ்வதை வலியுறுத்துவது  மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய நகர்ப்புறத்தை உருவாக்கும் நாட்டின் தொலைநோக்கை பிரதிபலிக்கின்றன.

இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

‘ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் நகரமயமாக்கல் நிகழ்ச்சி குறித்த சிறிய புத்தகத்தையும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789116

                                                                      *************



(Release ID: 1789260) Visitor Counter : 181