பிரதமர் அலுவலகம்
பீகார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை வழங்க அனுமதி
Posted On:
26 DEC 2021 9:52PM by PIB Chennai
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் தொழிற்சாலை ஒன்றில் நேர்ந்த விபத்து ஒரு துயரமான சம்பவமாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) இழப்பீடு வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது
முசாஃபர்பூர் தொழிற்சாலை ஒன்றில் நேர்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் அனுமதித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785393
-----
(Release ID: 1786391)
Visitor Counter : 142
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam