பிரதமர் அலுவலகம்
எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 DEC 2021 2:42PM by PIB Chennai
எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது;
‘’ எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு, உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது வலியுறுத்தல் என்னென்றும் நினைவில் கொள்ளத்தக்கது.. அவரது மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியுறுவதாக.’’
(வெளியீட்டு அடையாள எண்: 1785325)
வருகையாளர் எண்ணிக்கை : 254
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam