பிரதமர் அலுவலகம்
குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
Posted On:
24 DEC 2021 11:17AM by PIB Chennai
குஜராத்தின் கட்ச் நகரில் உள்ள குருத்வாரா லாக்பட் சாஹிபில் 2021, டிசம்பர் 25 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25 வரை குஜராத்தின் சீக்கிய சங்கத்தினர் குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். குருநானக் தேவ் அவர்கள் தமது பயணத்தின் போது லாக்பட்டில் தங்கியிருந்தார். மரத்தாலான காலணி, சாய்வு மேசை, குர்முகியின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அவரது நினைவுச் சின்னங்கள் குருத்வாரா லாக்பட் சாஹிபில் உள்ளன.
2021 பூகம்பத்தின் போது இந்த குருத்வாரா கடுமையாக சேதமடைந்தது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த திரு நரேந்திர மோடி இந்த சேதங்களை சரி செய்வதை உத்தரவாதப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமயத்தின் மீதான பிரதமரின் ஆழ்ந்த மரியாதையை இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. குரு நானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவையும் அவரது அண்மைக்கால பலவகை முயற்சிகளைப் பிரதிபலித்தன.
*****
(Release ID: 1784756)
Visitor Counter : 284
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam