பிரதமர் அலுவலகம்
ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் மேன்மை தங்கிய விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
Posted On:
20 DEC 2021 8:47PM by PIB Chennai
ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் மேன்மை தங்கிய விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.
இவர்களின் உரையாடலில், மேன்மை தங்கிய அதிபர் புதின் இந்தியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின் போது விவாதித்த சில விஷயங்களை இரு தலைவர்களும் தொடர்ந்து பேசினர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், உரங்கள் வழங்குவதில் ஒத்துழைப்பு, ரஷ்யாவின் தூர கிழக்குடன் இந்தியாவின் ஈடுபாட்டை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் எதிர்கால நடவடிக்கைகளை உறுதிபடுத்த இன்றைய பேச்சுவார்த்தை உதவி செய்தது. இந்த உரையாடல் சர்வதேச பிரச்சனைகளின் மீதான கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளவும் அனுமதித்தது.
இந்தியா-ரஷ்யா இடையேயான சிறப்பு மற்றும் முக்கியமான யுக்திகள் வகுத்தல் பங்களிப்பின் கீழ் வருகின்ற அனைத்து அம்சங்கள் மீதும் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பது என்றும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பன்முக விஷயங்களில் கலந்தாலோசிப்பது, ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் தொடர்ந்து பாடுபடுவது என்றும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
***
(Release ID: 1783960)
Visitor Counter : 167
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam