பிரதமர் அலுவலகம்

பூட்டான் அரசின் உயரிய சிவிலியன் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது


எனக்கு அளிக்கப்பட்ட இந்த அன்பான கவுரவத்தால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளேன், பூட்டான் மன்னருக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்: பிரதமர்

Posted On: 17 DEC 2021 8:05PM by PIB Chennai

பூட்டான் நாட்டின் தேசிய தினத்தையொட்டி அந்நாட்டு அரசின்  உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆப் தி துருக் கியால்போ‘ விருதை பூட்டான் மன்னர் மாட்சிமைதங்கிய ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.  தமக்கு அளிக்கப்பட்ட இந்த கவுரவத்திற்காக திரு மோடி, பூட்டான் மன்னருக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

பூட்டான் பிரதமரின் டுவிட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில்;

“நன்றி, லியோன்சென் @PMBhutan! தங்களது அன்பான உபசரிப்பு என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,  மாட்சிமைதங்கிய பூட்டான் மன்னருக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். 

பூட்டான் சகோதர-சகோதரிகளின் தனிச்சிறப்பு வாய்ந்த அன்பு மற்றும் அரவணைப்பை பெற்றதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பூட்டான் தேசிய தினத்தை கொண்டாடும் இந்த நன்னாளில் அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

பூட்டானின் தனித்துவம் மிக்க நீடித்த வளர்ச்சி மாதிரி மற்றும் ஆழ்ந்த ஆன்மீக வாழ்வியல் வழி என்னை மிகவும் கவர்ந்தது.  துருக் கியால்போவின் வழித்தோன்றல்களான மாட்சிமைதங்கிய மன்னர்கள், முடியாட்சிக்கு தனித்துவமிக்க அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், நம்நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ள அண்டை நாட்டு நட்புறவு சிறப்பு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா பூட்டானை எப்போதும் தனது மிக நெருங்கிய நட்பு நாடாகவும், அண்டை நாடாகவும்  கருதுவதுடன், பூட்டானின் வளர்ச்சிப் பயணத்தில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்“ என்று தெரிவித்துள்ளார்.

*****************



(Release ID: 1783443) Visitor Counter : 210