எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எரிசக்தி பாதுகாப்பு குறித்து, தேசிய அளவிலான ஓவியப் போட்டி 2021-க்கு எரிசக்தி சிக்கன அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 04 DEC 2021 1:39PM by PIB Chennai

எரிசக்தி சிக்கன அமைப்பு 2005-ல் தொடங்கப்பட்டதிலிருந்து,  எரிசக்தி பாதுகாப்பு குறித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.   “விடுதலைப் பெருவிழா: இந்தியாவில் எரிசக்தி சிக்கனம்“   மற்றும் “விடுதலைப் பெருவிழா: தூய்மையான கிரகம்“ என்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும்.  

மாநில அளவிலான  ஓவியப் போட்டி, 2021 டிசம்பர் 1 முதல் 10 வரை, நாட்டிலுள்ள அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான ஓவியப்போட்டி, 12 டிசம்பர், 2021 அன்று புதுதில்லியில் நடைபெறும்.   தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோருக்கு,  தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமான  டிசம்பர்14,  2021 அன்று பரிசு வழங்கப்படும்.  

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777980

******************


(रिलीज़ आईडी: 1778076) आगंतुक पटल : 468
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu , Kannada , Malayalam