சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்” இயக்கத்தின் நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு
Posted On:
02 DEC 2021 1:52PM by PIB Chennai
“வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்” இயக்கம் காரணமாக நவம்பர் 30 வரை முதலாவது தவணை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 5.9 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 11.7 சதவீதமும் கூடியுள்ளது. “வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்” இயக்கத்தின் நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோருடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் இதனை தெரிவித்தார்.
இந்த இயக்கத்தின் போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதங்களின் செயல்பாட்டையும், சாதனையையும் மத்திய சுகாதார செயலாளர் பாராட்டினார். தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ள போதும் தேசிய அளவில் 2-வது தவணை செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 12 கோடி அளவுக்கு இருப்பது முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.
நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 125 கோடியை கடந்துள்ளது. இவர்களில் 79.13 கோடி பேர் (84.3%) முதல் தவணையும் 45.82 கோடி பேர் (49%) 2-வது தவணையும் செலுத்தி கொண்டவர்கள்.
தமிழ்நாடு, பீகார், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ஸைகோவ்-டி தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்பதால் இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்ய முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களை அடையாளம் காணுமாறு இந்த மாநிலங்கள் கோரப்பட்டுள்ளன.
ஸைகோவ்-டி தடுப்பூசி செலுத்த தேசிய அளவிலான பயிற்சி நிறைவடைந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள குறிப்பாக அதிகம் நிலுவையில் உள்ள 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடையே விழிப்புணர்வை விரிவாக்க சமூகத் தலைவர்களையும், உள்ளூர் பிரபலங்களையும் பயன்படுத்துமாறு மத்திய சுகாதார செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777164
****
(Release ID: 1777260)
Visitor Counter : 277