ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக ஊதியம் மற்றும் பொருட்களுக்கான நிதியை வெளியிடுவதற்கான தனது உறுதியை இந்திய அரசு மீண்டும் வெளிப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2021 4:04PM by PIB Chennai

கிராமப்புற குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் வழங்குகிறது. இது ஒரு தேவை சார்ந்த திட்டமாகும்.

நடப்பு நிதி ஆண்டில், 240 கோடிக்கும் அதிகமான மனித உழைப்பு நாட்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன.

ஊதியம் மற்றும் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு ஒரு தொடர் நடவடிக்கையாகும். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதி ஆண்டில் நிதி ஓதுக்கீடு 18 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில்    இதுவரை ரூ 68,568 கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்படும் போதெல்லாம், நிதி அமைச்சகத்திடம் கோரப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில், பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ 50,000 கோடி அதிகமாக நிதி அமைச்சகம் வழங்கியது. சமீபத்தில், இடைக்கால நடவடிக்கையாக ரூ 10,000 கோடியை நிதி அமைச்சகம் வழங்கியது.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக ஊதியம் மற்றும் பொருட்களுக்கான நிதியை வெளியிடுவதற்கான தனது உறுதியை இந்திய அரசு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775017

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1775137) வருகையாளர் எண்ணிக்கை : 331
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam