பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav g20-india-2023

14-வது நிதி ஆணையத்திலிருந்து அடுத்த நிதி ஆணையக் காலமான 2021 - 2026 வரை பல வகை கல்வி உதவித் தொகை திட்டத்தையும் “சூழல் மற்றும் பருவநிலை ஆய்வு – மாதிரி கண்காணிப்பு முறைகள் மற்றும் சேவைகள் (அக்ராஸ்)” திட்டத்தையும் தொடர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

அக்ராஸ் மற்றும் அதன் 8 துணைத் திட்டங்களுக்கு அடுத்த நிதி சுழற்சியின் 5 ஆண்டுகளுக்கு ரூ.2135 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது

Posted On: 24 NOV 2021 3:41PM by PIB Chennai

பல வகைf; கல்வி உதவித் தொகை திட்டத்தையும் “சூழல் மற்றும் பருவநிலை ஆய்வு – மாதிரி கண்காணிப்பு முறைகள் மற்றும் சேவைகள் (அக்ராஸ்) திட்டத்தையும் தொடரப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அக்ராஸ் மற்றும் அதன் 8 துணைத் திட்டங்களுக்கு அடுத்த நிதி சுழற்சியின் 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-2026 வரை, ரூ.2135 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புவிசார் அறிவியல் அமைச்சகத்தின் பிரிவுகளான இந்திய வானிலை ஆய்வுத் துறை, நடுத்தர வகை வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம், தட்பவெப்ப நிலை தொடர்பான இந்திய கல்விக்கழகம், கடல்சார்ந்த தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்.

பொதுமக்களுக்கான வானிலை சேவை, வேளாண் துறைக்கான வானிலை சேவை, விமானப் போக்குவரத்துக்கான சேவைகள், சுற்றுச்சூழல் கண்காணிப்புச் சேவைகள், நீர் சார்ந்த வானிலை ஆய்வுச் சேவைகள், பருவநிலை சார்ந்த சேவைகள், சுற்றுலா, புனித யாத்திரை, மின் உற்பத்தி, நீர் நிர்வாகம், விளையாட்டுக்கள் மற்றும் சாகசம் போன்ற பல்வேறு சேவைகள் மூலம் பயன்பாட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மேம்பட்ட வானிலை, பருவநிலை, கடல்சார் முன்னறிவிப்பு மற்றும் சேவைகள், பிற ஆபத்தான தொழில் சார்ந்த சேவைகளுக்கு மற்றும் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுவதை இந்தத் திட்டம் உறுதிபடுத்தும்.(Release ID: 1774633) Visitor Counter : 158