பிரதமர் அலுவலகம்

நவம்பர் 16 ஆம் தேதி பிரதமர் உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை தொடங்கி வைக்கிறார்

சுல்தான்பூர் மாவட்டத்தில் விரைவுச் சாலையில் 3.2 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்ட விமான தளத்தில் விமான சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுவார்

Posted On: 15 NOV 2021 11:07AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 16 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு, சுல்தான்பூர் மாவட்டத்தின் கார்வால்கேரியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பகல் 1.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.

விரைவுச் சாலையை தொடங்கி வைத்த பின்னர், சுல்தான்பூர் மாவட்டத்தில், அவசர காலத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் இறங்கி/புறப்படுவதற்கு ஏதுவாக 3.2 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில் இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பிரதமர் பார்வையிடுவார்.

பூர்வாஞசல் விரைவுச் சாலை 341 கி.மீ. நீளமுடையது. லக்னோ மாவட்டம் சாட்சராய் கிராமத்தில், லக்னோ- சுல்தான்பூர் சாலையில் (என்எச்-731) தொடங்கும் விரைவுச் சாலை, உ.பி.- பீகார் கிழக்கு எல்லையில் 18 கி.மீ, தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 31-ல் உள்ள ஹைதரியா கிராமத்தில் முடிவடைகிறது. 6 வழிச் சாலையாக உருவாகியுள்ள விரைவுச் சாலையை வருங்காலத்தில் 8 வழிச் சாலையாக விரிவுபடுத்தலாம். சுமார் ரூ. 22,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக லக்னோ, பாராபங்கி, அமேதி, அயோத்தி, சுல்தான்பூர், அம்பேத்கர் நகர், ஆசம்கர், மாவ், காசிப்பூர் ஆகிய மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.



(Release ID: 1771921) Visitor Counter : 244