பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவம்பர் 15-ம் தேதி முதலாவது தணிக்கை தினக் கொண்டாட்டத்தையொட்டிய நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 15 NOV 2021 11:06AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, சிஏஜி அலுவலக வளாகத்தில் நவம்பர் 16-ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் முதல் தணிக்கை தினத்தை குறிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையையும் பிரதமர் திறந்து வைப்பார்.

சிஏஜி-யின் வரலாற்று தோற்றத்தை குறிக்கும் வகையிலும், கடந்த பல ஆண்டுகளாக வெளிப்படையான பொறுப்புடைமை மிக்க நிர்வாகத்துக்கு உதவி வருவதைக் குறிக்கும் வகையிலும் தணிக்கை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தலைமை தணிக்கைத் துறை அதிகாரியும் கலந்து கொள்வார்.


(रिलीज़ आईडी: 1771860) आगंतुक पटल : 348
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam