பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை குறித்து பிரதமர் தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் உரையாடினார்
प्रविष्टि तिथि:
07 NOV 2021 9:42PM by PIB Chennai
தமிழ் நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறித்து தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலினிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். மத்திய அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இயன்ற அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று திரு. மோடி உறுதி அளித்தார்.
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது:
"தமிழக முதலமைச்சர் @mkstalin திரு மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்.”
(रिलीज़ आईडी: 1769919)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam