பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிளாஸ்கோவில் நடைபெற்றசிஓபி26 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி –இஸ்ரேல் பிரதமர்சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2021 8:04PM by PIB Chennai

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட்டும் சந்தித்து பேசினர்.

இரு தலைவர்களும் இருதரப்பு உத்திசார் கூட்டமைப்பை மதிப்பாய்வு செய்தனர் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தங்களின் மனநிறைவை தெரிவித்தனர். இருதரப்பு ஒத்துழைப்பை குறிப்பாக உயர் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அடுத்த ஆண்டு, இந்தியா- இஸ்ரேல் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூர்ந்த பிரதமர், திரு. பென்னட்டை இந்தியாவிற்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்தார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1769131) வருகையாளர் எண்ணிக்கை : 237