சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதாரம் நலன் குறித்த விரிவான தொலைநோக்கை அளித்துள்ளார் பிரதமர் திரு நரேந்திர மோடி : டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
26 OCT 2021 3:39PM by PIB Chennai
முழுமையான அணுகுமுறையின் கீழ் சுகாதார நலன் குறித்த விரிவான தொலைநோக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ளார் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்புத் திட்டம் குறித்து திரு மன்சுக் மாண்டவியா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது. முழுமையான அணுகுமுறை நோக்கிய விரிவான சுகாதார நலனுக்கான தொலைநோக்கை நமக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ளார்
வட்டாரம், மாவட்டம், மாநிலம், மற்றும் தேசிய அளவில் விலை குறைவான சுகாதார நலனுக்கு செறிவூட்டல் அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது. செழிப்பை அடைவதற்கு எந்த நாட்டுக்கும் சுகாதாரம் முதலில் தேவை. எதிர்காலத்தில் பெருந்தொற்று சவால்களை சமாளிக்க, இந்தியா முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றம் மூன்றாம் நிலை டிஜிட்டல் நலன் கட்டமைப்பை வழங்குகிறது.
நாடு முழுவதும் 1,50,000 சுகாதார மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 79,000 மருத்துவ மையங்கள் ஏற்கனவே செயல்படுகின்றன. நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை பெருந்தொற்று வழங்கியது.
ரயில் மற்றும் விமானம் மூலம் கொண்டு செல்லும் சுகாதார வசதிகள், 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தீவிர சிகிச்சை மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. புதிய தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
***
(Release ID: 1766736)
Visitor Counter : 355