மத்திய அமைச்சரவை
நீடித்த பலன்களுக்காக தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) -ஐ 2025-26 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
12 OCT 2021 8:37PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று (12.10.2021) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்)-ஐ 2025-26 தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து நகரங்களிலும் திடக்கழிவுகளை அறிவியல் ரீதியாக சுத்தப்படுத்தும் நோக்கில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக மாற்றுவதில் நீடித்த பலனை பெறுவதற்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கழிவுநீர் மேலாண்மையில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கிலும் இத்திட்டம் (அம்ருத் திட்டத்தில் இடம் பெறாத நகரங்கள்) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ.1,41,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்காக 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ.36,465 கோடி வழங்கப்படும்.
கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் செப்டிக் டேங்க் போன்ற ஆபத்தான பகுதிகளில் பணியாற்றுவதை முற்றிலும் ஒழிப்பதுடன், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளுக்கு சென்று மாசுபடுத்துவதை தவிர்க்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்து நகரங்களும், குறைந்தபட்சம் 3 நட்சத்திர குப்பையில்லா சான்றிதழை பெறும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
******
(Release ID: 1763752)
Visitor Counter : 289
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam