பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 OCT 2021 9:47AM by PIB Chennai

விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“நமது படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும்  விமானப்படை தினத்தில் எனது வாழ்த்துக்கள். தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு அடையாளமாக இந்திய விமானப்படை திகழ்கிறது. நாட்டை பாதுகாப்பதிலும் சவாலான காலங்களில் மனிதாபிமான செயல்களினாலும் அவர்கள் தங்களை தனித்து காட்டியுள்ளனர்.”, என்று கூறியுள்ளார்.(Release ID: 1762021) Visitor Counter : 108