சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வாகன அழிப்புக் கொள்கையின் கீழ் சலுகைகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Posted On: 07 OCT 2021 10:32AM by PIB Chennai

அதிகபட்ச பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவைக் கொண்டுள்ள பழைய, மாசுபடுத்தும் வாகனங்களை அழிப்பதற்கு வாகன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வாகன அழிப்புக்கொள்கை முன்வந்துள்ளது.

இதன்படி 2022 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இந்த சலுகைத் திட்டத்திற்க்கு இந்திய அரசிதழில் 05.10.2021 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் அறிவிக்கையை 720(இ) சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த சலுகை கீழ்க்காணுமாறு இருக்கும்:

  1. தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருப்பின் 25 சதவீதம் வரை
  2. வணிகரீதியான போக்குவரத்து வாகனங்களாக இருப்பின் 15 சதவீதம் வரை

இந்தச் சலுகை போக்குவரத்து வாகனங்களாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரையும், தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும் கிடைக்கும்.

அரசிதழ் விவரங்களை இந்த இணைப்பில் காணவும்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/oct/doc202110701.pdf

****



(Release ID: 1761702) Visitor Counter : 238