பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நடிகர்கள் திரு. கணஷ்யாம் நாயக் மற்றும் திரு. அர்விந்த் திரிவேதியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 OCT 2021 10:23AM by PIB Chennai

நடிகர்கள் திரு. கணஷ்யாம் நாயக் மற்றும் திரு. அரவிந்த் திரிவேதியின் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர்

தங்கள நடிப்பின் மூலம் மக்களின் இதயங்களை வென்ற இரண்டு திறமையான நடிகர்களைக் கடந்த சில நாட்களில் நாம் இழந்துவிட்டோம். திரு. கணஷ்யாம் நாயக் அவர்களின் பன்முகப் பாத்திரங்களுக்காக குறிப்பாக ‘தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா’ என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் நினைவுகூரப்படுவார். மேலும் அவர் கனிவான மற்றும் பண்பான மனிதரும் ஆவார்.

திரு. அரவிந்த் திரிவேதியையும் நாம் இழந்துவிட்டோம். அவர் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் பொது சேவையில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ராமாயனம் தொலைக்காட்சித் தொடரில் அவர் மேற்கொண்ட கதாபாத்திரம் பல தலைமுறை இந்தியர்களால் நினைவுக்கூரப்படும் இரண்டு நடிகர்களின் குடும்பங்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

*****


(Release ID: 1761363) Visitor Counter : 176