சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுனிசெப்பின் உலக குழந்தைகள் நிலை அறிக்கையை திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 05 OCT 2021 4:06PM by PIB Chennai

"உலக குழந்தைகள் நிலை 2021; என் மனதில்: குழந்தைகளின் மன நலனை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்எனும் யுனிசெப்பின் உலகளாவிய முதன்மை பதிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார். குழந்தைகளின் மன நலனில் கொவிட்-19 பெருந்தொற்றின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த அறிக்கை விவரிக்கிறது

மன நலனை மையமாகக் கொண்ட இந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை விவரித்த திரு மாண்டவியா, “மனநலம் என்பது பழைய பிரச்சினை மற்றும் வளர்ந்து வரும் சிக்கலும் ஆகும். முழுமையான ஆரோக்கியம் மற்றும் முழுமையான நல்வாழ்வை நமது பாரம்பரிய மருத்துவமுறைகள் வலியுறுத்தினாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன,” என்றார்.

கிராமப்புற-விவசாய பின்னணியை சேர்ந்த தனது சொந்த கூட்டுக் குடும்பத்தை உதாரணமாக காட்டிய அவர், இத்தகைய அமைப்புகளில் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிக எண்ணிக்கையிலான பிற குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள், எனவே, மனதளவில் பாதிக்கப்படும் போது, சில சமயங்களில் பெற்றோர்களால் தவிர்க்கப்படும் விஷயங்களில் கூட மற்ற உறுப்பினர்களிடம் இருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன என்றார்.

தனிக்குடித்தனங்களின் காரணமாக தனிமையுணர்வு அதிகரித்து மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

கொவிட் -19 என்பது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் மனஅழுத்தத்தின் சவாலாக விளங்கியது என்று கூறிய அமைச்சர், கொவிட்-19-ன் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைச்சராக தனது தனிப்பட்ட அனுபவத்தை அவர் விவரித்தார்.

"மருந்துகளின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் புதிய ஆலைகளை நிறுவுவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் இந்த பணி மிகவும் மன அழுத்தத்தை அளித்தது. யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் மிதி வண்டி ஓட்டுதல் ஆகியவை மன அழுத்தத்தை சமாளிக்க உதவியது,” என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761105

------

 (Release ID: 1761166) Visitor Counter : 172