பிரதமர் அலுவலகம்

ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் குறித்த திரு பில் கேட்ஸின் கனிவான வார்த்தைகளுக்கு பிரதமர் நன்றி

Posted On: 29 SEP 2021 9:49PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் குறித்த திரு பில் கேட்ஸின் கனிவான வார்த்தைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

திரு பில் கேட்ஸின் சுட்டுரை செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்,

“ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் குறித்து கனிவான வார்த்தைகளைத் தெரிவித்த திரு பில் கேட்ஸுக்கு நன்றி. 

சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு அபரிமிதமான வாய்ப்பு உள்ளது. இந்தப் பாதையை நோக்கி இந்தியா கடினமாக செயலாற்றி வருகிறது”, என்று கூறியுள்ளார்.

*************

 (Release ID: 1759617) Visitor Counter : 57