சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மொத்த கொவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 87 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2021 9:58AM by PIB Chennai

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 87 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 84,62,957 முகாம்களில் 87,07,08,636 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 

கடந்த 24 மணி நேரத்தில் 26,030  பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,58,002 ஆக உயர்ந்துள்ளது.

 

நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.81 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020-க்குப் பிறகு மிக அதிகமாகும்.

 

தொடர்ந்து 93 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  2,92,206 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.87 சதவீதம் ஆகும்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 13,21,780 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 56,57,30,031 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 95 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 1.88 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.42 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 29 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 112 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1756649


(வெளியீட்டு அடையாள எண்: 1758833) வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Malayalam