உள்துறை அமைச்சகம்
இடது சாரி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம்
Posted On:
26 SEP 2021 4:35PM by PIB Chennai
இடது சாரி தீவிரவாதம் குறித்து, புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் மத்திய அமைச்சர்கள், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களின் முதல்வர்கள், ஆந்திர உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரு. அமித்ஷா பேசியதாவது:
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாத பாதிப்பு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் முயற்சிகளால், இடது சாரி தீவிரவாதத்தை முறியடிப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இடது சாரி தீவிரவாத தாக்குதல் சம்பவம் 23 சதவீதமாகவும், உயிரிழப்பு சதவீதம் 21 சதவீதமாகவும் குறைந்துள்ளது. முதல் முறையாக உயிரிழப்பு 200க்கு கீழ் குறைந்துள்ளது நாம் அனைவருக்கும் மிகப் பெரிய சாதனை.
வடகிழக்கு பகுதியில் இடது சாரி தீவிரவாதிகளை சரணடைய செய்வதிலும், ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்வதிலும், அரசு வெற்றி கண்டுள்ளது. இதுவரை 16,000 பேர் தீவிரவாதத்தை கைவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இடது சாரி அமைப்புகளுக்கான வருமானத்தை முடக்குவது மிக முக்கியம். இதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டும்.
இடதுசாரி தீவிரவாத பிரச்சினைகளை தீர்ப்பதை அடுத்த ஒராண்டில், அனைத்து முதல்வர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். மத்திய பாதுகாப்பு படைகளை பணியமர்த்துவதற்காக, மாநில அரசுகள் செய்யும் நிரந்தர செலவை குறைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய முடிவெடுத்துள்ளார்.
இவ்வாறு திரு அமித்ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758295
-----
(Release ID: 1758393)
Visitor Counter : 681