பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க துணை அதிபர் திருமதி.கமலா ஹாரிஸ் உடன் நடத்திய சந்திப்பின்போது ஆற்றிய தொடக்க உரை

Posted On: 24 SEP 2021 9:14AM by PIB Chennai

மதிப்பிற்குரியோரே,

முதலாவதாக, எனக்கும், எனது குழுவினருக்கும் நீங்கள் வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

மதிப்பிற்குரியோரே,

சில மாதங்களுக்கு முன், தொலைபேசி மூலம் உரையாடும் வாய்ப்பை நாம் இருவரும் பெற்றோம், அப்போது நாம் விரிவான விவாதம் நடத்தியதோடு, நீங்கள் என்னிடம் பேசிய விதம், அன்பானதாகவும், இயற்கையானதாகவும் இருந்ததுஇது எப்போதும் என் நினைவில் நிற்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி

மதிப்பிற்குரியோரே,

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன், அது ஒரு நெருக்கடியான காலகட்டம்இந்தியா, கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது, அது எங்களுக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டம்எனவே, ஒரே குடும்பத்தினரைப் போன்று, உறவினர் என்ற உணர்வுடன், நீங்கள் அன்புடன் உதவிக்கரம் நீட்டினீர்கள்.   நீங்கள் என்னிடம் பேசிய வார்த்தைகள், தேர்ந்தெடுத்த வார்த்தைகள்.   அதனை நான் எப்போதும் மனதிற்கொள்வதுடன், ஒரு உண்மையான நண்பரைப் போல, எனது அடிமனதின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

மதிப்பிற்குரியவரே,

ஒத்துழைப்பு பற்றிய தகவலை நீங்கள், மிகுந்த பொறுப்புணர்வுடன் வழங்கியதோடு, அதன்பிறகு உடனடியாக அமெரிக்க அரசு, அமெரிக்க பெரு நிறுவனங்கள் மற்றும் இந்திய சமுதாயத்தினர், என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இநிதியாவிற்கு உதவியதை நாங்கள் அறிவோம்.  

மதிப்பிற்குரியவரே,

அதிபர் பைடனும், நீங்களும்மிகவும் சவாலான சூழல் மற்றும் சவாலான காலகட்டத்தில் அமெரிக்காவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்  கொண்டீர்கள், எனினும், மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே, கோவிட் பாதிப்பானாலும், பருவநிலை மாற்றம் அல்லது குவாட் ஆனாலும், அனைத்துப் பிரச்சினைகளிலும் நீங்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்ததுடன், அமெரிக்கா மிக முக்கியமான முன்முயற்சிகளையும் மேற்கொண்டது

மதிப்பிற்குரியவரே,

மிகவும் பெரிய  மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளில்இந்தியாவும், அமெரிக்காவும், இயற்கையாக அமைந்த நட்பு நாடுகளாகத் திகழ்கிறோம்.    நாம் ஒரே மாதிரியான நற்பண்புகள், ஒரே மாதிரியான புவியியல், அரசியல் ஆர்வத்தைப் பெற்றிருப்பதோடு, நம்மிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   மதிப்பிற்குரியவரே, வினியோகச் சங்கிலியை வலுப்படுத்த, இயன்றவரை புதிய மற்றும் புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளியைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் நீங்கள் சிறப்புக் கவனம் செலுத்தக்கூடிய துறைகள் ஆகும், இந்தத் துறைகள் எனக்கும் மிகுந்த ஆர்வமுள்ள துறைகள் என்பதோடு, சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், இந்தத் துறைகளில் நமது ஒத்துழைப்புகள் மிகவும் முக்கியமானதாகும்

மதிப்பிற்குரியவரே,

இந்தியாஅமெரிக்கா இடையே, இருநாட்டு மக்கள் மத்தியில் மிகவும் துடிப்பான மற்றும் வலிமையான தொடர்புகளை நாம் பெற்றிருக்கிறோம். இதனை நீங்களும் மிக நன்றாக அறிவீர்கள்.   இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்திய சமுதாயத்தினர், நம் இரு நாடுகளிடையே பாலமாகத் திகழ்வதோடு, நட்புறவுப் பாலமாகவும் இருப்பதால், அது பொருளாதாரம் அல்லது சமுதாயப் பங்களிப்பு என எதுவாக இருந்தாலும், மிகுந்த பாராட்டுக்குரியதாகவே உள்ளது

மதிப்பிற்குரியவரே,

நீங்கள் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே, அதுபோன்றதொரு முக்கியமான, வரலாற்று நிகழ்வு ஆகும்.   உலகெங்கும் உள்ள ஏராளமான மக்களுக்கு நீங்கள் உத்வேகத்தின் ஆதாரமாகத் திகழ்கிறீர்கள்.   அதிபர் பைடன் மற்றும் உங்களது தலைமையின்கீழ், நமது இருதரப்பு நட்புறவு, புதிய உச்சத்தை எட்டும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.  

மதிப்பிற்குரியவரே,

இந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் வேளையில், இந்தியர்களும்இந்தியாவில் அதனைத் தொடரவே விரும்புவதால், உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள், எனவே, இந்தியா வருமாறு நான் உங்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கிறேன்.   மதிப்பிற்குரியவரே, மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வதோடு, இந்த சிறப்பான வரவேற்பிற்காக எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

*****



(Release ID: 1757627) Visitor Counter : 296