பிரதமர் அலுவலகம்
சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் மேதகு இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சவுத் பிரதமர் திரு நரேந்திரமோடியுடன் சந்திப்பு
Posted On:
20 SEP 2021 9:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சவுத்-ஐ இன்று சந்தித்தார். இரு நாடுகள் இடையே நிறுவப்பட்ட யுக்திக் கூட்டு கவுன்சிலின் மேற்ப்பார்வையின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு இருதரப்பு முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து இந்த சந்திப்பில் ஆய்வு செய்யப்பட்டது. எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில், சவுதி அரேபியாவில் இருந்து அதிகளவிலான முதலீட்டைப் பெறுவதில் இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் உட்பட பிராந்திய வளர்ச்சிக் கண்ணோட்டங்களும் இந்த சந்திப்பில் பகிரப்பட்டன.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியர்களின் நலனில் அக்கறை செலுத்தியதற்காக, சவுதி அரேபியாவுக்கு பிரதமர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.
சவுதி அரேபிய மன்னர் மற்றும் பட்டத்து இளவரசருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்தார்
(Release ID: 1756715)
Visitor Counter : 198
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam