சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2021 9:23AM by PIB Chennai
நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 80.43 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 0.99%.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,32,158 ஆகும்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.68%.
கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,26,71,167 பேர் குணமடைந்துள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.04%) 86 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் (1.97%) 20 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.23 கோடியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756177
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1756255)
வருகையாளர் எண்ணிக்கை : 233