பிரதமர் அலுவலகம்

கோவாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம், பிரதமர் செப்டம்பர் 18ம் தேதி கலந்துரையாடுகிறார்

Posted On: 17 SEP 2021 4:34PM by PIB Chennai

கோவாவில்  நடுத்தர வயது மக்கள் 100 சதவீதம் பேருக்கு கொவிட் முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்தது பற்றி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

தொடர்ச்சியான திகா உத்சவ்கள் மூலம் மக்களை திரட்டியது, அடிதட்டு மக்களை சென்றடைந்தது, பணிசெய்யும் இடங்களில், முதியோர் இல்லங்களில், மாற்றுத்திறனாளிகள் போன்ற முன்னுரிமை பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தியது, மற்றவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் தவறான எண்ணங்களை போக்கியது உட்பட மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளால் அனைவருக்கும் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்த முடிந்தது.

தடுப்பூசி போடும் பணி விரைவாக நடப்பதை உறுதி செய்ய, டவ்தே புயல் போன்ற சவால்களையும்  மாநில அரசு சமாளித்தது . 

இந்நிகழ்ச்சியில் கோவா முதல்வர் கலந்து கொள்கிறார்.

*****************



(Release ID: 1755808) Visitor Counter : 166