பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்கள்

Posted On: 14 SEP 2021 3:10PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைப்பார்கள். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சன்சத் தொலைக்காட்சி பற்றி:

2021 பிப்ரவரி மாதத்தில், லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டு, சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்/ கொள்கைகளின் அமலாக்கம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள்/ நலன்கள்/ பிரச்சினைகள் ஆகிய முக்கியமான நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

                                                                                           ------


(Release ID: 1754795) Visitor Counter : 457