தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

மின்னணு ஷ்ரம் தளத்தில் இதுவரை சுமார் 27 லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்: மத்திய அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி

Posted On: 09 SEP 2021 2:05PM by PIB Chennai

மின்னணு ஷ்ரம் தளத்தில் முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு ஏதுவாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் புதுதில்லியில் ஷ்ரம் சக்தி பவன் கட்டிடத்தில் அமைந்துள்ள பல்வேறு அமைச்சகங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான முகாம் இன்று நடத்தப்பட்டது. சுமார் 80 தொழிலாளர்கள் இந்த முகாமின் மூலம் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முகாமை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி, இந்தத் தளம் குறித்தும், தொழிலாளர்கள் இதில் பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அனைத்து முறைசாரா தொழிலாளர்கள் பற்றிய தேசிய தரவை உருவாக்குவதன் மூலம் இதுபோன்ற பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திரமோடியின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மின்னணு தளத்தில் இதுவரை 27 லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753473

*****************



(Release ID: 1753548) Visitor Counter : 240