சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நால்கோ நமஸ்யா கைப்பேசி செயலி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் புதுமையான தளம்

Posted On: 06 SEP 2021 4:40PM by PIB Chennai

சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான நேஷ்னல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ), ‘நால்கோ சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான யோகாயோக் செயலி’ (நமஸ்யா) எனும் நவீன மற்றும் புதுமையான இருமொழி செயலியை உருவாக்கியிருப்பதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

நிறுவனத்துடன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களின் நலனுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் குறு நிறுவன சமுதாயத்தை சென்றடைவதற்கும், நாட்டின் சுரங்கம் மற்றும் கனிமங்கள் சூழலியலின் மேம்பாட்டிற்கும் நால்கோ எடுத்து வரும் முயற்சிகளை மத்திய சுரங்கங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி பாராட்டினார்.

சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைப்பதற்கான தளமாக நமஸ்யா கைப்பேசி செயலி விளங்குகிறது. விற்பனையாளர் பதிவு செயல்முறை, விநியோகிக்க கூடிய பொருட்களின் விவரங்கள், விற்பனையாளர் மேம்பாடு மற்றும் நால்கோவின் பயிற்சி திட்டங்கள் குறித்த விவரங்களை இந்த செயலி வழங்குகிறது.

பொறுப்புடன் செயல்படும் பெருநிறுவனமாகவும், இந்தியாவின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக விளங்கும் இந்நிறுவனம், குறிப்பாக கனிமம் மற்றும் உலோக தொழிலில் இயங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சூழலியலில் மேம்பாடு மற்றும் நீடித்த வளர்ச்சியை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752558

*****************


(Release ID: 1752619) Visitor Counter : 257