நிலக்கரி அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிலக்கரி அமைச்சகத்தின் பிசிசிஎல் நடத்தியது

Posted On: 04 SEP 2021 3:00PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சுகாதாரம் மற்றும் கொவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான நிகழ்ச்சியை நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினிரத்னா நிறுவனமான பாரத் கோகிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) நடத்தியது.

ஜார்கண்டில் உள்ள பூட்கி பலிஹரி பகுதியில் இருக்கும் பெரும்பாலும் பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் கிராமமான அல்கோரியா பாஸ்தியின் மக்களுக்கு 125 கிருமி நாசினி பொட்டலங்கள் மற்றும் முகக் கவசங்களை பாரத் கோகிங் கோல் லிமிடெட்டின் பெருநிறுவன சமூக பொறுப்பு துறை வழங்கியது. 

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கற்றல் மையமான, ஜகஜீவன் நகரில் உள்ள பெஹலா கடம் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை பாரத் கோகிங் கோல் லிமிடெட் வழங்கியது. 

விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751978

*****************



(Release ID: 1752067) Visitor Counter : 247