மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாகத்தில் வளர்ச்சியை நோக்கி செல்ல, ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைய இந்தியா தயார் : மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 02 SEP 2021 12:58PM by PIB Chennai

தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாகத்தில் வளர்ச்சியை நோக்கி செல்ல, ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைய இந்தியா தயார் என தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த .நா மாநாட்டின் (UNCTAD) 15வது கூட்டத்துக்கு  முன்னதாக, இணைய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டு கொள்கை பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்தனர். இதில் அவர்கள் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சமூக மேம்பாடு குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டு இந்தியாவின் டிஜிட்டல் நடவடிக்கை குறித்து பேசினார்.

 டிஜிட்டல்மயமாக்கத்தில் இந்தியாவின் வெற்றிக் கதை, பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நடக்கிறது எனவும், உலகத்திற்கு புதுமையான தீர்வுகளை வழங்கும், உலகளாவிய தொழில்நுட்ப சூழலில் இரண்டும் பங்காற்றுகிறது எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.   

இணையதள இணைப்பில், மிகப் பெரிய இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது எனவும், சுமார் 80 கோடி பேர் இணையதள இணைப்புடன் உள்ளனர் என்றும் அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய ஊரக பிராட்பேண்டு இணைப்பு திட்டங்களில் ஒன்றும், இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது என அவர் கூறினார்.

தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாகத்தில் வளர்ச்சியை நோக்கி செல்ல, ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைய இந்தியா தயார் என அவர் மேலும் தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751345

*****

(Release ID: 1751345)



(Release ID: 1751372) Visitor Counter : 207