ஆயுஷ்

அகில இந்திய ஆயுர்வேத கழகத்தில் ஊட்டசத்து பூங்கா: அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.

Posted On: 01 SEP 2021 2:52PM by PIB Chennai

மாதம் முழுவதும் நடத்தப்படும்போஷன்திட்ட நிகழ்ச்சிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி  இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் ஊட்டசத்து தேவையை போக்க, பழங்கால ஆயுர்வேத அறிவை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெரிவிக்க வேண்டியது இப்போதைய தேவை என அவர் கூறினார்போஷன் திட்டத்தின் தொடக்கமாக, அகில இந்திய ஆயுர்வேத கழகத்தில் ஊட்டச்சத்து பூங்காவை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில், ஆயுஷ்பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ச்பரா மகேந்திரபாய் கலந்து கொண்டார். முருங்கை, நெல்லி ஆகிய மரக்கன்றுகளையும் இரு அமைச்சர்களும் நட்டனர். ஆயுஷ் அமைச்சகத்தின் உத்தரவின் கீழ், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத கழகம், போஷன்  - 2021 கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானிஇரத்தச் சோகையை குறைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக இணைந்து ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி பாராட்டினார்ஆயுர்வேத அறிவியல் தரவுகள் வெளியிட வேண்டிய தேவையை வலியுறுத்திய அவர், அப்போதுதான் ஆயுர்வேதத்தின் பங்களிப்பை உலக நாடுகளால் ஏற்க முடியும் என கூறினார்.

ஊட்டசத்து இரு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. விலை மலிவாக இருக்க வேண்டும், முழுமையான நல்வாழ்வுக்கு எளிதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஆயுர்வேதம் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்

ஆரோக்கியமான சந்ததி மற்றும் எளிமையான சமையல் குறிப்புகள் அடங்கிய ஆயுஷ் காலண்டரை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பிரபலப்படுத்துவது பற்றியும் அவர் பரிசீலித்தார்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் முழுமையான நலனுக்கு முருங்கை, நெல்லி, அஸ்வகந்தா, துளசி போன்ற மூலிகைகளின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நலன்களின் முக்கியத்துவத்தையும், ஆதாரம் அடிப்படையிலான ஆயுர்வேத ஊட்டச்சத்து நடைமுறைகளையும்  டாக்டர் முன்ச்பரா மகேந்திராபாய் எடுத்து கூறினார்ஆரோக்கியமான சந்ததியை சுமக்க, தாயின் வாழ்வில் ஊட்டசத்தின் முக்கியத்துவத்தையும், இதற்கு ஆயுர்வேதம் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் அவர் எடுத்துக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751071(Release ID: 1751100) Visitor Counter : 288