பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய சபையின் தலைவர் திரு. சார்லஸ் மைக்கேலுடனான தொலைபேசி உரையாடல்
प्रविष्टि तिथि:
31 AUG 2021 8:46PM by PIB Chennai
ஐரோப்பிய சபைத் தலைவர் மேன்மைமிகு திரு. சார்லஸ் மைக்கேலுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
ஆப்கானிஸ்தானில் நடந்தேறியுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும், பிராந்தியத்திலும், உலகத்தின் மீதும் அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர். பலரை பலி கொண்ட காபுல் சர்வதேச விமான நிலையத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இருவரும் கடுமையாகக் கண்டித்தனர்.
நிலையான மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தலைவர்கள், இதில் இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆற்றக்கூடிய பங்கு குறித்து விவாதித்தனர்.
இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள், குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்துத் தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
------
(रिलीज़ आईडी: 1750937)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam