பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல எழுத்தாளர் திரு புத்ததேவ் குஹாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2021 3:30PM by PIB Chennai

பிரபல எழுத்தாளர் திரு புத்ததேவ் குஹாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

 “திரு புத்ததேவ் குஹாவின் எழுத்துக்கள் பல அம்சங்கள் நிறைந்தவையாகவும், சுற்றுச்சூழலை நோக்கிய மிகச்சிறந்த உணர்வு நிலையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. அவரது படைப்புகளை பல தலைமுறையினர்குறிப்பாக இளைஞர்கள் மிகவும் ரசித்தார்கள். அவரது மறைவு இலக்கிய உலகிற்கு மிகப் பெரும் இழப்பு. அன்னாரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.

                                                                                                                                          -----


(வெளியீட்டு அடையாள எண்: 1750424) வருகையாளர் எண்ணிக்கை : 275