பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தை முன்னிட்டு 4 கருப்பொருள்களில் ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சிகள்

Posted On: 29 AUG 2021 11:45AM by PIB Chennai

போஷன் அபியான் என்பது, உள்ளாட்சி அமைப்புகள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் துறைகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறையினரை உள்ளடக்கிய மக்கள் இயக்கமாகும். இந்தத் திட்டத்தில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து (போஷன்) மாதமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விரைவான மற்றும் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையும் நோக்கத்தோடு, ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கிய அணுகுமுறையாக செப்டம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் (1-7) மரம் நடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டாவது வாரத்தில் (8-15) ஊட்டச்சத்திற்கு யோகா மற்றும் ஆயுஷ் என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் (16-23)  அதிக பொறுப்புள்ள மாவட்டங்களின்  அங்கன்வாடி பணியாளர்களுக்கு மண்டல ஊட்டச்சத்து கிட்கள்' வழங்கப்படும். நான்காவது மற்றும் இறுதி வாரத்தில் (24-30) தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படும்.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து அனைத்து வயது பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750104

*****************(Release ID: 1750235) Visitor Counter : 284