ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குஜராத் அங்லேஸ்வரில் உற்பத்தி செய்யப்பட்ட கோவாக்சின் முதல் வர்த்தக தொகுப்பு: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 29 AUG 2021 1:09PM by PIB Chennai

குஜராத் மாநிலம், அங்கலேஸ்வரில் பாரத் பயோடெக் நிறுவனத்தின், சிரான் பெரிங் தடுப்பூசி மையத்தில், உற்பத்தி செய்யப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின்  முதல் வர்த்தக தொகுப்பை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார். நவ்சாரி தொகுதி எம்பி திரு சி.ஆர்.பாட்டீல், அங்கலேஸ்வர் எம்எல்ஏ திரு ஈஸ்வர்சிங் படேல், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

இதன் தொடக்க நிகழ்ச்சியில், திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

மாண்பு மிகு பிரதமரின் தொலைநோக்கு காரணமாக, முதல் உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்க முடிந்தது.  உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை, இந்தியா செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த உள்நாட்டு தடுப்பூசிகளின் காரணமாக இது சாத்தியமானது. தேசியஅளவிலான தடுப்பூசி திட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. 

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், இங்கு உற்பத்தியான கோவாக்சின் முதல் தொகுப்பை நாட்டுக்கு அர்ப்பணிப்பது முக்கியமான தருணம்.

கோவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி திறன் அதிகரிப்பு, இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்துக்கு மேலும் உந்துதல் அளிக்கும். 

பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா என்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி இந்தியாவில் நடப்பது நமக்கு மிகவும் பெருமையான விஷயம். இன்று முதல் அங்கலேஸ்வரில் உள்ள தடுப்பூசி மையம் மாதம் ஒன்றுக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்களை உற்பத்தி செய்யும்.

பாரத் பயோடெக் நிறுவனம் ஐதராபாத், மாலூர், பெங்களூரு மற்றும் புனே வளாகத்தில் ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிக்கிறது.

தற்போது அங்கலேஸ்வரில் உள்ள மையம், தடுப்பூசி உற்பத்தியை மேலும் அதிகரிக்கும். அங்கலேஸ்வரி மையத்தில் உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகள் செப்டம்பர் முதல் விநியோகத்துக்கு வரும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசினார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறுகையில், ‘‘ உலகளாவிய பாதுகாப்பு மற்றும் தரத்துடன் தடுப்பூசி உருவாக்க வேண்டும் என்ற எங்களின் இலக்கை தற்போது அடைந்துள்ளோம். ஆண்டுக்கு 1 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750124

*****************(Release ID: 1750154) Visitor Counter : 306