சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 23 AUG 2021 10:08AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 58.25 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; கடந்த 160 நாட்களில் இது மிகக் குறைவு.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.03%. இது, கடந்த 2020, மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,33,924 ஆக உள்ளது. 155 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.63% ஆக உயர்வு. இதுமார்ச், 2020க்குப் பிறகு மிக அதிகமான விகிதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 44,157 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,16,80,626 பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.91%) 59 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் (1.94%) 28 நாட்களாக 3%க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 50.75 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748144

******

(Release ID: 1748144)



(Release ID: 1748183) Visitor Counter : 226