சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
Posted On:
18 AUG 2021 9:23AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 56.06 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; கடந்த 154 நாட்களில் இது மிகக் குறைவு.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.14%, 2020 மார்ச்சிலிருந்து இது மிகக் குறைந்த எண்ணிக்கை.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,67,415 ஆக உள்ளது, 148 நாட்களில் இது மிகக் குறைவு.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.52%. 2020 மார்ச்சிலிருந்து இது மிக அதிகம்.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 3,14,85,923 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 37,169 பேர் குணமடைந்துள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 1.95%; கடந்த 54 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தற்போது 1.96 விழுக்காடாக உள்ளது; 23 நாட்களாக 3%க்கும் கீழ் குறைவாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 49.84 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746823
••••
(Release ID: 1746823)
(Release ID: 1746850)
Visitor Counter : 215
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam