சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒரு நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் இந்தியா சாதனை : 24 மணி நேரத்தில் 88.13 லட்சம் தடுப்பூசிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
17 AUG 2021 10:31AM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88.13 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. இது ஒரு நாளில் இதுவரை எட்டியிராத அளவாகும். இதனையும் சேர்த்து, இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 55 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 62,12,108 முகாம்களில் 55,47,30,609 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,14,48,754 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,830 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.51 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்; 154 நாட்களில் இதுதான் மிகவும் குறைவு.
தொடர்ந்து 51 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,69,846 ஆக உள்ளது. இது, கடந்த 146 நாட்களில் மிகவும் குறைவாகும். இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.15 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 15,63,985 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 49,66,29,524 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 1.98 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.61 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 22 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 71 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746570
(வெளியீட்டு அடையாள எண்: 1746590)
வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam