பிரதமர் அலுவலகம்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் புகழஞ்சலி

प्रविष्टि तिथि: 09 AUG 2021 9:41AM by PIB Chennai

காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது புகழஞ்சலிகள். மகாத்மா காந்தியால் உத்வேகமடைந்து, வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவெங்கும் பரவி எதிரொலித்தது; நம் நாட்டு இளைஞர்களை எழுச்சி பெறச் செய்தது” என்று கூறியுள்ளார்.

 

***


(रिलीज़ आईडी: 1743929) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam