பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட பயனாளிகளுடன் ஆகஸ்ட் 7 அன்று பிரதமர் உரையாடவுள்ளார்

प्रविष्टि तिथि: 05 AUG 2021 6:59PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட பயனாளிகளுடன் 2021 ஆகஸ்ட் 7 அன்று காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவுள்ளார்.

தகுதியுள்ள ஒருவர் கூட விடுபடாதவாறு திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான தீவிர பிரச்சாரத்தை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2021 ஆகஸ்ட் 7- பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட தினமாக அம்மாநிலம் கொண்டாடவுள்ளது.

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 4.83 கோடி பயனாளிகள் 25,000-க்கும் அதிகமான நியாய விலை கடைகளில் இருந்து இலவ ரேஷன் பொருட்களை பெறுகிறார்கள்.

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் மற்றும் முதல்வர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், திரிபுரா, ஹரியானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

-----


(रिलीज़ आईडी: 1742904) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam