பிரதமர் அலுவலகம்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 AUG 2021 9:46AM by PIB Chennai

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது :

"வரலாற்று நிகழ்வு ! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் ஒரு நாள்.

வெண்கலத்தை தாயகத்திற்குக் கொண்டு வந்த நமது ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்தச் சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். நமது ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது. "


(रिलीज़ आईडी: 1742603) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada