பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன், ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 04 AUG 2021 9:27AM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆகஸ்ட் 5–ந் தேதி பிற்பகல் ஒரு மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார்.

ஆகஸ்ட் 5-ந் தேதியை பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்ட நாளாக, உத்தரப்பிரதேச மாநிலம்  கொண்டாட உள்ளது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறாமல் ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் தொடங்கப்பட உள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் வாயிலாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த, ஏறத்தாழ 15 கோடி பயனாளிகள் இலவச ரேஷன் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, சுமார் 80,000 நியாய விலைக்கடைகள் மூலம் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் திரு.யோகி ஆதித்தநாத்தும் கலந்து கொள்கிறார்.

****


(रिलीज़ आईडी: 1742146) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada